கேப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்!..
எழுத்துலகம் என்றும் மறக்க முடியாத
இலக்கிய வித்தகன் நீ.
நோபல் பரிசு தந்த மகிழ்ச்சியை
உன் தேசம் தாண்டி
உலகு அனைத்துக்கும் உரியதாக்கியவன் நீ.
அறிவுலகம் உன்னை அறிந்தது
ஆங்கிலம் வாயிலாகத்தான்- எனினும்
தவிப்புகளை தாய்மொழியில் மட்டுமே
படைப்புகளாகத் தந்தவன் நீ.
துயரம் தோய்ந்த தென் அமெரிக்கப் பக்கங்களை
தேச எல்லைகள் தாண்டி
நேசமுடன் பார்க்க வைத்த பெரும் பனித்துளி நீ.
இலக்கியம் படிப்போரை
முயக்கம் கொள்ள வைத்த
அசாத்திய இயக்கம் நீ.
கனவில் பலர் காணும் உயரங்களை
என்றோ தொட்டுவிட்ட இமயம் நீ.
எம்மோடு இன்றில்லை நீ!....
நீ விட்டுச் சென்ற புகழ் வித்துக்கள்
இறப்பென்ற ஒன்று
இப்படிப்பட்டவனுக்கு இல்லை என்பதை
இனிமேல் சொல்லட்டும்.
சரவணன். கா