Tuesday, 10 June 2014

நள்ளிரவில் அவன்...

சாலையில் உராயும்
செருப்பின் ஒலி
அந்தரங்கம் தேடும்
அறைவரை நீளும் நடுநிசி!

எழுந்த கணம் முதல்
விழுந்த கணம் வரை
கனக்கின்ற மனத்தை
உடலுக்குள் ஒன்றாக்கி
எதிர் இருக்கும் உடலோடு
இடம் எதுவெனத் தெரியாமல்
ஏதேனும் ஒற்றைப் புள்ளியொன்றில்
தன்னை மறக்கத் துணிந்த
ஓரிரு நொடித்துளிகளுக்கு சற்று முன்
வீறிட்டெழுந்து அவனைக் குலுக்கி எழுப்பியது
அவன் மௌனிக்க மறந்த
அவனுடைய மொபைல்

அலறல் தந்த குழப்பத்தில்
குவிந்த ஈர உணர்வுகளின்
வடிந்த புள்ளி எதுவெனத் தெரியாமல்
“ஹலோ” என்றான் அவன்.

சரவணன். கா